/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/இருக்கன்குடி அணையில் முள் செடியால் குறையும் நீர்மட்டம்இருக்கன்குடி அணையில் முள் செடியால் குறையும் நீர்மட்டம்
இருக்கன்குடி அணையில் முள் செடியால் குறையும் நீர்மட்டம்
இருக்கன்குடி அணையில் முள் செடியால் குறையும் நீர்மட்டம்
இருக்கன்குடி அணையில் முள் செடியால் குறையும் நீர்மட்டம்
ADDED : ஜன 25, 2024 04:42 AM

சாத்துார்: சாத்துார் இருக்கன்குடி அணையில் காடு போல அடர்த்தியாக வளர்ந்து இருக்கும் முள் செடியால் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது.
இருக்கன்குடியில் அர்ச்சுனா நதி வைப்பாறு ஆகிய இரு நதிகளுக்கு இடையே அணை கட்டப்பட்டு உள்ளது. மொத்தம் 22 அடி உயரம் உள்ள இந்த அணையின் மூலம் துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வரையிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் பெய்த பருவமழை காரணமாக அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் இருக்கன்குடி அணை மூலம் பாசன வசதி பெரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இருக்கன்குடி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிக்குள் ஏற்கனவே காடு போல முள் செடி முளைத்து இருந்தன. தொடர் மழையால் அணை நிரம்பிய நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மூழ்கிய முள் செடிகளின் வேர்கள் நீரில் மூழ்கியதால் வேர்கள் அழுகி தற்போது காய்ந்து போன நிலையில் உள்ளன.
நீரில் மூழ்கி இருக்கும் முள் செடியின் காரத்தன்மையால் தண்ணீரின் நிறமும் சுவையும் மாறி உள்ளது. இந்த நிலையில் இருக்கன்குடி அணையின் இரு கரை பகுதிகளிலும் காடு போல அடர்த்தியாக வளர்ந்து வரும் முள் செடியால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.
தற்போது இருக்கன்குடி அணையில் 19 அடி உயரம் தண்ணீர் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு 22 அடி வரை இருந்த தண்ணீர் முள் செடிகள் அதிக அளவில் தண்ணீரை உறிஞ்சி குடித்து வருவதால் கிடுகிடுவென நீர்மட்டம் குறைந்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இருக்கன்குடி அணையின் இரு கரை ஓரங்களில் காடு போல வளர்ந்து உள்ள முள் செடிகளால் விவசாயத்திற்கு பயன்படக்கூடிய தண்ணீர் வீணாக முள்செடிகள் ஊறிஞ்சி வருகிறது. எனவே அணைப்பகுதியில் அவசியமின்றி வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்றிடவும் மீண்டும் முளைக்காத படித்திடவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.