/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தரமற்ற உரம், விதைகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் தரமற்ற உரம், விதைகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்
தரமற்ற உரம், விதைகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்
தரமற்ற உரம், விதைகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்
தரமற்ற உரம், விதைகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்
ADDED : செப் 10, 2025 02:03 AM

சிவகாசி : மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து தரமற்ற உரம் விதைகள் விற்பனை செய்வதை தடை விதிக்க வேண்டும் என சிவகாயில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
சிவகாசி சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு சப் கலெக்டர் முகமது இர்பான் தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு ராமச்சந்திர ராஜா, ராஜபாளையம்: ராஜபாளையம் பகுதியில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கொண்டனேரி, பெரியாதாதி குளம், கடம்பன்குளம், அயன்கொல்லங்கொண்டான் குளம் உட்பட 5 கண்மாய்களில் ஆக்கிரமிப்பு காரணமாக நீர்ப்பாசனம் தடைபடுகிறது. இந்த கண்மாய்களில் கழிவுநீர் கலப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு பயிர்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்மையப்பன், சேத்துார்: மாவட்டத்தில் உரக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மக்காச்சோளம், நெல், உளுந்து உள்ளிட்ட விதைகள், உரம் தரம் இல்லாமல் உள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.மேலும் விவசாயிகள் வாங்கும் விதை, உரங்களுக்கு உரிய பில் தருவதில்லை. எனவே அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.
வேளாண் உதவி இயக்குநர்(விதை ஆய்வு): உரக்கடைகளில் ஆய்வு செய்து தரமில்லாத 15 நிறுவன விதைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வேளாண் துறை சான்று உள்ள விதைகளை மட்டுமே விவசாயிகள் வாங்க வேண்டும்.
நிறைகுளம், ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் கம்மாபட்டியில் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டும் பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டதாக அதிகாரிகள் பொய்யான அறிக்கை அளிக்கின்றனர்.
தமாஸ், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்: கண்மாய் ஆக்கிரமிப்பில் உள்ள 7 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மாற்று இடம் வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மாற்று ஏற்பாடு செய்தபின் ஆக்கிரமிப்புகள் இடிக்கப்படும்.
சப் கலெக்டர்: ஆக்கிரமிப்பாளர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களா என்பதை ஆய்வு செய்து, மாற்று இடம் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
ராமச்சந்திர ராஜா, ராஜபாளையம்: தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் , தனியார் உரக்கடைகளில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மண்வளத்தை கெடுக்கும் கலப்பு உரங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் விவசாயிகள் பெயரில் அனுமதி பெற்று கண்மாய்கள், பட்டா நிலங்களில் இருந்து செங்கல் சூளைகளுக்கு செம்மண் கடத்தப்படுவது குறித்து சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும். குறைதீர் கூட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் உரிய பதில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
சப் கலெக்டர்: விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் உரிய பதில் அளித்து சம்பந்தப்பட்ட குறை அதிகாரிகள் அறிக்கை அளிக்க வேண்டும், என்றார்.