/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ திடக்கழிவு மேலாண்மைக்கு பதில் குப்பை கிடங்கிற்கு தீ வைப்பு திடக்கழிவு மேலாண்மைக்கு பதில் குப்பை கிடங்கிற்கு தீ வைப்பு
திடக்கழிவு மேலாண்மைக்கு பதில் குப்பை கிடங்கிற்கு தீ வைப்பு
திடக்கழிவு மேலாண்மைக்கு பதில் குப்பை கிடங்கிற்கு தீ வைப்பு
திடக்கழிவு மேலாண்மைக்கு பதில் குப்பை கிடங்கிற்கு தீ வைப்பு
ADDED : செப் 10, 2025 02:02 AM

சத்திரப்பட்டி : சத்திரப்பட்டி அருகே குப்பை சேகரித்து தரம் பிரித்து நுண் உரமாக மாற்ற வேண்டிய திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு பதில் தீ வைத்து எரிக்கப்படுவதால் கிராமத்தினர் சுவாசக் கோளாறு உள்ளிட்ட சிக்கல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேல ராஜகுலராமன் ஊராட்சியில் பத்திற்கும் அதிகமான உட்கடை கிராமங்களை கொண்ட இப்பகுதியில் சேகரமாகும் குப்பை கழிவுகளை தரம் பிரித்து நுண் உரமாக மாற்ற திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த முடிவானது.
இதன்படி ஊராட்சிக்குட்பட்ட அழகாபுரியில் ரோட்டை ஒட்டி உரக்கிடங்கு அமைக்கப்பட்டது. இதன் அருகிலேயே குப்பைகளை தரம் பிரிக்க குழிகளும் அதன் அருகே மண்புழு உரமாக மாற்ற நுண்உர கிடங்கும் அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் கழிவுகள் தரம் பிரித்து உரமாக மாற்றும் பணிகள் நடந்த நிலையில் நாளடைவில் குப்பை மொத்தமாக குவிக்கப்பட்டது.
தற்போது சேகரமாகும் குப்பையை மொத்தமாக கொட்டி எரிக்கப்பட்டுவதால் கிராமத்தினர் உட்பட சுற்றுப்பகுதி மக்களுக்கும் சுவாசக் கோளாறுடன் சுகாதார கேடு ஏற்படுகிறது.
அருகில் உள்ள காலி நிலங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் பறந்து ஆக்கிரமிக்கின்றன. மாவட்ட நிர்வாகம் குப்பை எரிக்கப்படுவதை தடுத்து நுண்உர கிடங்கை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதியினரின் எதிர்பார்ப்பு.