/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அணிவகுக்கும் லாரிகளால் விபத்து அபாயம் அல்லம்பட்டி ரோட்டில் தினசரி அவலம் அணிவகுக்கும் லாரிகளால் விபத்து அபாயம் அல்லம்பட்டி ரோட்டில் தினசரி அவலம்
அணிவகுக்கும் லாரிகளால் விபத்து அபாயம் அல்லம்பட்டி ரோட்டில் தினசரி அவலம்
அணிவகுக்கும் லாரிகளால் விபத்து அபாயம் அல்லம்பட்டி ரோட்டில் தினசரி அவலம்
அணிவகுக்கும் லாரிகளால் விபத்து அபாயம் அல்லம்பட்டி ரோட்டில் தினசரி அவலம்
ADDED : ஜூன் 21, 2025 11:56 PM

விருதுநகர்: விருதுநகர் அல்லம்பட்டி ரோட்டில் தினமும் அணிவகுத்து நிற்கும் லாரிகளால் விபத்து அபாயத்துடன் வாகன ஓட்டிகள் பயணிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருப்புக்கோட்டை ரோட்டில் இருந்து அல்லம்பட்டி செல்லும் ரோட்டில் ஏராளமான பருப்பு மில்கள் செயல்படுகின்றன. இவற்றில் தயாரிப்பிற்கான மூலப்பொருட்களை கொண்டு வருவதற்கும், தயாரித்த பொட்களை ஏற்றிச் செல்லவும் நுாற்றுக்கணக்கான லாரிகள் வந்து செல்கின்றனர்.
இந்த லாரிகள் அனைத்தும் அல்லம்பட்டி ரோட்டின் ஓரங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இப்பகுதி காலை முதல் இரவு வரை ரோடு ஓரங்களில் நிற்கும் லாரிகளால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. மேலும் கல்லுாரி, பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சைக்கிள், டூவீலர்களில் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
நகருக்குள் லாரிகள் வருவதற்கு நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் அல்லம்பட்டி பகுதியில் எவ்வித தடையின்றியும் எல்லா நேரங்களிலும் லாரிகள் சர்வசாதாரணமாக சென்று வருகிறது.
இதனால் சாத்துார் - அல்லம்பட்டி ரோடு, அருப்புக்கோட்டை - அல்லம்பட்டி ரோடு ஓரங்களில் லாரிகளில் இருந்து லோடு வேன்களில் பொருட்களை ஏற்றி, இறக்கி எளிதாக நகருக்குள் கொண்டு வருகின்றனர். எனவே அல்லம்பட்டி ரோட்டில் லாரிகள் நிறுத்தப்படுவதை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து இனி வரும் காலங்களில் லாரிகள் நிற்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.