/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/நுாற்றாண்டு கண்டநகராட்சியில் மண் ரோடு கதறும் கொய்ய தோப்பு வீதி மக்கள்நுாற்றாண்டு கண்டநகராட்சியில் மண் ரோடு கதறும் கொய்ய தோப்பு வீதி மக்கள்
நுாற்றாண்டு கண்டநகராட்சியில் மண் ரோடு கதறும் கொய்ய தோப்பு வீதி மக்கள்
நுாற்றாண்டு கண்டநகராட்சியில் மண் ரோடு கதறும் கொய்ய தோப்பு வீதி மக்கள்
நுாற்றாண்டு கண்டநகராட்சியில் மண் ரோடு கதறும் கொய்ய தோப்பு வீதி மக்கள்
ADDED : பிப் 25, 2024 06:15 AM

விருதுநகர், : நுாற்றாண்டு கண்ட விருதுநகர் நகராட்சியின் 2வது வார்டு கணேஷ்நகரை அடுத்து செல்லும் கொய்ய தோப்பு வீதியில் தற்போது வரை மண் தரை ரோடு உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
விருதுநகர் நகராட்சி 2வது வார்டில் கணேஷ்நகரை அடுத்து கொய்யத்தோப்பு வீதி உள்ளது.நகராட்சி பகுதியில் இது வரை ரோடு போடாத இடமாக இந்த தெருக்கள் உள்ளன. வெறும் மண் பாதையாக இருப்பதால் மழைக்காலங்களில் இந்த வழியை பயன்படுத்தமுடியாது.
கடந்த வடகிழக்கு பருவ மழை போது இப்பகுதி குடியிருக்கும் மக்கள்வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் சிரமப்பட்டனர்.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் சிலர் மண்ணை கொட்டி மெத்தி உள்ளனர். தற்போது ரோடு போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை. ரயில்வே ஸ்டேஷனுக்கு அவசரத்திற்கு செல்ல வேலுச்சாமி நகர், கணேஷ் நகர் பகுதி மக்கள்இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது இந்த வழி சுத்தமாக போக்குவரத்து லாயக்கற்றதாக மாறி விட்டது. நுாற்றாண்டு விழா கண்ட விருதுநகர் நகராட்சியில் மண் ரோடு இருப்பது வேதனை என அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர். குடியிருப்புகள் பெருகி விட்ட நிலையில் நகராட்சி நிர்வாகம் இப்பகுதி மக்களின் ரோடு வசதியை உறுதி செய்ய வேண்டும்.