/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பூமி பூஜை போட்டு ஒன்றரை ஆண்டாச்சு கிடப்பில் போடப்பட்ட நடைபாதை பணிபூமி பூஜை போட்டு ஒன்றரை ஆண்டாச்சு கிடப்பில் போடப்பட்ட நடைபாதை பணி
பூமி பூஜை போட்டு ஒன்றரை ஆண்டாச்சு கிடப்பில் போடப்பட்ட நடைபாதை பணி
பூமி பூஜை போட்டு ஒன்றரை ஆண்டாச்சு கிடப்பில் போடப்பட்ட நடைபாதை பணி
பூமி பூஜை போட்டு ஒன்றரை ஆண்டாச்சு கிடப்பில் போடப்பட்ட நடைபாதை பணி
ADDED : ஜன 28, 2024 06:23 AM
சிவகாசி : சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரையில் ரூ. 1 கோடி மதிப்பில் நடைபாதை அமைப்பதற்காக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பூமி பூஜை நடந்தும் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரையில் சமூக ஆர்வலர்களால் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டிந்த நடைபாதை சேதமடைந்து விட்டது. அப்பகுதியில் முழுவதும் திறந்த வெளி கழிப்பறையாக மாறியது. மேலும் குப்பைகளும் கண்மாய் கரையிலேயே கட்டப்பட்டு வந்தது. எனவே கரையில் நடைபாதையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து சிவகாசி நகராட்சி நுாற்றாண்டு சிறப்பு நிதியில் கண்மாயில் புதிய நடைபாதை அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பூமி பூஜை 2022 செப். ல் நடந்தது.
அதன்படி கண்மாய் கரையில் 2 மீட்டர் அகலம், 841 மீட்டர் நீளத்திற்கு புதிய நடைபாதை ஏற்படுத்தி, தடுப்புச் சுவர் அமைத்து, கழிவுநீர் கலக்காத வகையில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட இருந்தது.
ஆனால் இதுவரையிலும் எந்தப் பணியும் துவங்கவில்லை. இதனால் கண்மாய் கரை முழுவதும் முட்புதர்கள் ஆக்கிரமித்துள்ளது. தவிர மீண்டும் திறந்தவெளி கழிப்பறையாக மாறியதோடு குப்பைகளும் கொட்டப்பட்டு வருகின்றது. அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. எனவே உடனடியாக நடைபாதை அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.