/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கொள்ளையில் பங்கு கொடுக்கும் திட்டங்கள் தி.மு.க., அரசு வகுத்தது நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டம் கொள்ளையில் பங்கு கொடுக்கும் திட்டங்கள் தி.மு.க., அரசு வகுத்தது நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டம்
கொள்ளையில் பங்கு கொடுக்கும் திட்டங்கள் தி.மு.க., அரசு வகுத்தது நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டம்
கொள்ளையில் பங்கு கொடுக்கும் திட்டங்கள் தி.மு.க., அரசு வகுத்தது நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டம்
கொள்ளையில் பங்கு கொடுக்கும் திட்டங்கள் தி.மு.க., அரசு வகுத்தது நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டம்
ADDED : மே 30, 2025 01:32 AM

விருதுநகர்:‛மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டங்களை மக்கள் கேட்கவில்லை. அடிக்கும் கொள்ளை பணத்தில் மக்களுக்கும் பங்கு கொடுப்பதற்காகவே திட்டங்களை தி.மு.க., வகுத்தது', என விருதுநகரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
விருதுநகர், திருநெல்வேலி மாவட்ட சட்டசபை தொகுதி பொறுப்பாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சீமான் கூறியதாவது:
கோடநாடு கொலை வழக்கை இரண்டு மாதங்களில் விசாரணை செய்து நீதியை நிலை நாட்டுவோம் என தி.மு.க., தெரிவித்து நான்கு ஆண்டுகளாகியும் நீதியை நிலை நாட்டவில்லை. துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை எந்த நிலையில் உள்ளது என்பது தெரியவில்லை.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு, அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கான தீர்ப்பு என ஒவ்வொன்றையும் தங்களுக்கு சொந்தமானதாக எடுத்துக்கொள்வது திராவிட கட்சிகளின் ஆட்சிமுறை.
நடிகர் கமலுக்கு எதிராக பேசும் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவிற்காக, தி.மு.க., கட்சி தலைவராக இல்லாமல் தமிழக முதல்வராக சென்று கர்நாடகா தேர்தலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர் முதல்வர் ஸ்டாலின்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சென்ற த.வெ.க., கட்சி நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தை பெயர் வாங்குவதற்காக நடந்த நிகழ்வாக ஆட்சியில் இருப்பவர்கள் சித்தரிக்க முயல்கின்றனர். தி.மு.க., ஒன்றும் வீழ்த்த முடியாத கோட்டை அல்ல, எதிர்க்கட்சியாக கூட வர முடியாத அளவிற்கு இருந்ததும் உண்டு.
கொள்ளை அடிக்கும் பணத்தை மக்களுக்கும் கொஞ்சம் பங்கு கொடுக்க வேண்டும் என மாணவிகளுக்கு புதுமைப் பெண், மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன் திட்டங்களை கொண்டுவந்தனர். ரூ. 10 லட்சம் கோடி கடன் பெற்று அதிக கடன் பெற்ற மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.
கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி, நீட் விலக்கு, இஸ்லாமியர் சிறை கைதிகள் விடுதலை என அனைத்திலும் பொய்யான வாக்குறுதி அளித்த மக்களை ஏமாற்றினர்.
பா.ஜ., தற்போது திராவிட கட்சிகளின் தோள் மீது அமர்ந்து உள்ளது. , என்றார்.