/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட மாநாடுதமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட மாநாடு
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட மாநாடு
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட மாநாடு
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட மாநாடு
ADDED : ஜன 28, 2024 07:19 AM

ஸ்ரீவில்லிபுத்தூர், : ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விருதுநகர் மாவட்ட 26வது மாநாடு, ஊர்வலம் நடந்தது.
நேற்று மாலை 5:45 மணிக்கு ராமகிருஷ்ணாபுரத்திலிருந்து துவங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது. இதில் ஏராளமான விவசாயிகள், கட்சியினர் பங்கேற்றனர்.
பின்னர் இரவு 7:00 மணியளவில் வடக்கு ரத வீதியில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன், முன்னாள் எம்.பி.க்கள் அழகிரிசாமி, லிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, பொன்னுப்பாண்டி, விவசாய சங்க தலைவர்கள் பேசினர். டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.