/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரோட்டோர புளிய மரங்களில் வீணாகும் புளியம் பழங்கள் ரோட்டோர புளிய மரங்களில் வீணாகும் புளியம் பழங்கள்
ரோட்டோர புளிய மரங்களில் வீணாகும் புளியம் பழங்கள்
ரோட்டோர புளிய மரங்களில் வீணாகும் புளியம் பழங்கள்
ரோட்டோர புளிய மரங்களில் வீணாகும் புளியம் பழங்கள்
ADDED : மே 29, 2025 01:40 AM

காரியாபட்டி: காரியாபட்டியில் மதுரை - அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள புளிய மரங்களில் புளியம் பழங்கள் காய்த்து, தானாக கீழே விழுந்து வாகனங்களில் நசுங்கி வீணாகி வருகிறது.
ஏலம் விட்டு, நெடுஞ்சாலைத்துறைக்கு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஊர்களுக்கு செல்லும் ரோடுகளில் ஏராளமான புளிய மரங்கள் இருந்தன. காய்கள் காய்த்து தொங்கும். இந்த புளியம்பழத்திற்கு ருசி அதிகம் என்பதால் கடும் கிராக்கி இருந்து வந்தது.
அவ்வப்போது ஏலம் விட்டு நெடுஞ்சாலைத்துறைக்கு வருவாய் ஈட்டி வந்தனர். ரோடு விரிவாக்கம், சரிவர பராமரிப்பு இல்லாததால், புளிய மரங்கள் வெட்டப்பட்டும், பட்டும் போயின.
பெரும்பாலான ரோடுகள் மரங்கள் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன. இந்நிலையில், காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி உள்ளிட்ட பகுதியில் பல்வேறு முக்கிய ஊர்களுக்கு செல்லும் ரோடுகளில் இன்னும் புளிய மரங்கள் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் புளியங் காய்கள் காய்த்து தொங்கும். அதிக மரங்கள் இல்லாததால் ஏலம் விடுவதில் சுணக்கம் ஏற்பட்டது. இதனை கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர்.
பல்வேறு இடங்களில் புளியம் பழங்களாக மரத்தில் கொத்து கொத்தாக கிடக்கின்றன. காத்து பலமாக வீசும் சமயத்தில் தானாக கீழே விழுந்து வாகனங்களில் நசுங்கி எதற்கும் பயன்படாமல் போகிறது. இருக்கிற மரங்களில் காய்க்கிற புளியம்பழங்களை குறைந்த அளவு தொகைக்கு ஏலம் விட்டால் பயனுள்ளதாக அமையும். நெடுஞ்சாலைத்துறைக்கு ஓரளவிற்கு வருவாய் கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.