/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சிவன் கோயிலில் செயல்படாத ஆன்மிக புத்தக நிலையம் சிவன் கோயிலில் செயல்படாத ஆன்மிக புத்தக நிலையம்
சிவன் கோயிலில் செயல்படாத ஆன்மிக புத்தக நிலையம்
சிவன் கோயிலில் செயல்படாத ஆன்மிக புத்தக நிலையம்
சிவன் கோயிலில் செயல்படாத ஆன்மிக புத்தக நிலையம்
ADDED : மே 29, 2025 01:39 AM

சிவகாசி: சிவகாசி சிவன் கோயிலில் ஆன்மிகப் புத்தக நிலையம் செயல்படாமல் இருப்பதால் பக்தர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
சிவகாசி சிவன் கோயிலில் ஒரு ஆண்டிற்கு முன்பு கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகத்திற்கு முன்பு வரை கோயில் உள்ளே நுழைவு வாயில் அருகே ஆன்மிக புத்தக நிலையம் செயல்பட்டது. இங்கு ஆன்மிகம் சம்பந்தமான புத்தகங்கள், நாளிதழ்கள் வைக்கப்பட்டிருந்தன.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் புத்தக நிலையத்தில் அமர்ந்து தேவையான புத்தகங்களை படித்தனர். கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் ஆன்மிக புத்தக நிலையம் செயல்படுவதற்கு என தனியாக இடம் ஒதுக்கப்பட்டது.
ஆனால் இங்கு இதுவரையிலும் புத்தகங்கள் வைக்கப்படவில்லை. தற்போது வரை புத்தக நிலையம் செயல்படாமல் இருப்பதால் பக்தர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
எனவே இங்கு ஆன்மிகப் புத்தகங்கள் வைக்கப்பட்டு புத்தக நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.