/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தேங்கும் கழிவுநீர், ஒழுகும் குடிநீர் தொட்டி, திறந்த வெளி கழிப்பறை தேங்கும் கழிவுநீர், ஒழுகும் குடிநீர் தொட்டி, திறந்த வெளி கழிப்பறை
தேங்கும் கழிவுநீர், ஒழுகும் குடிநீர் தொட்டி, திறந்த வெளி கழிப்பறை
தேங்கும் கழிவுநீர், ஒழுகும் குடிநீர் தொட்டி, திறந்த வெளி கழிப்பறை
தேங்கும் கழிவுநீர், ஒழுகும் குடிநீர் தொட்டி, திறந்த வெளி கழிப்பறை
அங்கன்வாடி மையம் வேண்டும்
சுபலட்சுமி, குடும்பதலைவி: இரைச்சின்னம்பட்டியில் 10 க்கும் மேற்பட்ட குழந்தைகள் 2 கி.மீ., தூரம் நடந்து சென்று கல்லுமடம் அங்கன்வாடிக்கு அழைத்துச் செல்ல வேண்டி உள்ளது. குழந்தையின் பெற்றோர்கள் கூலி வேலை செய்வதால் அவர்களுடைய பணி கெடுகிறது. ஊரில் அங்கன்வாடி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த ஊரில் மையம் இருப்பதால் குழந்தைகளை அழைத்துச் செல்ல யோசிக்கின்றனர்.
கழிப்பறை இல்லை
பாப்பம்மாள், குடும்பதலைவி: ஊரில் கழிப்பறை இல்லாமல் பெண்கள் சிரமப்படுகின்றனர். மெயின் ரோட்டை கழிப்பறையாக பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அங்கு அடிக்கடி வாகனங்கள் வந்து செல்வதால் அங்கும் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். ஊரில் ஆண், பெண் இருபாலருக்கும் நவீன சுகாதார வளாகம் கட்டித்தர ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடிப்படை வசதிகள் இல்லை
முனியசெல்வம், குடும்பதலைவி: இரைச்சின்னம்பட்டியில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. கழிப்பறை இல்லை. குடிநீர் இல்லை. வாறுகால்கள் ரோடுகள் மோசம். அத்தியாவசிய வசதிகள் கேட்டு பலமுறை ஊராட்சியிடம் கோரிக்கை வைத்தும் பலன் இல்லை. புறக்கணிக்கப்பட்ட பகுதியாக எங்கள் ஊர் உள்ளது. ஊரில் அவசியமான தேவைகளை பூர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.