Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ துப்பாக்கியுடன் சுற்றிய சென்னை வாலிபரின் நண்பர் கைது

துப்பாக்கியுடன் சுற்றிய சென்னை வாலிபரின் நண்பர் கைது

துப்பாக்கியுடன் சுற்றிய சென்னை வாலிபரின் நண்பர் கைது

துப்பாக்கியுடன் சுற்றிய சென்னை வாலிபரின் நண்பர் கைது

ADDED : மார் 28, 2025 02:22 AM


Google News
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே பாணாங்குளத்தில் (ஏர்கன்) துப்பாக்கியுடன் பிடிபட்ட சென்னை மேடவாக்கம் ராஜேஷின் 24, நண்பரான ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜான் போஸ்கோவை மதுரை ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் அருகே பானாங்குளத்தில் நேற்று முன்தினம் மதியம் 1:00 மணிக்கு டூவீலரில் 2 பேர் சுற்றி திரிந்தனர். கிராம மக்கள் அவர்களை பிடித்து விசாரித்த போது ஒருவர் தப்பி விட்டார். மற்றொருவரிடம் இருந்த ஏர்கன் துப்பாக்கி கீழே விழுந்துள்ளது. கிருஷ்ணன்கோவில் போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் விசாரித்த போது அவர் சென்னை மேடவாக்கம் ராஜேஷ் என்பதும், தப்பியவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜான் போஸ்கோ என்பதும், சிறை நண்பர்களான இவர்கள் கிராமங்களில் உள்ள தனி வீடுகளில் கொள்ளை அடிக்க திட்டமிட்டு ஸ்ரீவில்லிபுத்துார் வந்ததும் தெரிய வந்தது.

இருவரும் தங்கள் பேக்கை மதுரை ரயில்வே ஸ்டேஷன் பொருட்கள் பாதுகாப்பு அறையில் வைத்து விட்டு வந்ததும் தெரிந்தது. நேற்று காலை ஆரோக்கிய ஜான் போஸ்கோ தன் பேக்கை வாங்க அங்கு வந்துள்ளார். அப்போது மதுரை ரயில்வே போலீசார் உதவியுடன் ஜான்போஸ்கோவை தனிப்படையினர் பிடித்து கிருஷ்ணன்கோவில் கொண்டு வந்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us