/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஸ்ரீவி.,ரயில்வே சுரங்கப்பாதை தண்ணீரில் சிக்கிய பள்ளி வேன்ஸ்ரீவி.,ரயில்வே சுரங்கப்பாதை தண்ணீரில் சிக்கிய பள்ளி வேன்
ஸ்ரீவி.,ரயில்வே சுரங்கப்பாதை தண்ணீரில் சிக்கிய பள்ளி வேன்
ஸ்ரீவி.,ரயில்வே சுரங்கப்பாதை தண்ணீரில் சிக்கிய பள்ளி வேன்
ஸ்ரீவி.,ரயில்வே சுரங்கப்பாதை தண்ணீரில் சிக்கிய பள்ளி வேன்
ADDED : ஜன 03, 2024 05:48 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சித்தாலம்புத்தூர் ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய தண்ணீரில் சிக்கிய தனியார் பள்ளி வேன் மீட்கப்பட்டது.
கடந்த மாதம் பெய்த மழையினால் இந்த ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கி மக்கள் பயணிக்க முடியாத நிலை இருந்து வருகிறது.
அடிக்கடி வாகனங்கள் பழுதாகி நின்று விடுகிறது. இதனால் டூவீலரில் செல்பவர்கள் பல கி.மீ. தூரம் சுற்றி செல்கின்றனர்.
நேற்று மாலை 5:00 மணிக்கு ஒரு தனியார் பள்ளி வேன் மாணவர்களுடன் செல்லும்போது பழுதாகி நின்று விட்டது. அதிலிருந்த மாணவர்கள் இறக்கி அழைத்து செல்லப்பட்டு, வேன் மீட்கப்பட்டது.
மழை பெய்தாலே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி மக்கள் செல்ல முடியாத நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கு ரயில்வே நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.