Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஸ்ரீ ரமண வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

ஸ்ரீ ரமண வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

ஸ்ரீ ரமண வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

ஸ்ரீ ரமண வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

ADDED : ஜூன் 28, 2025 11:27 PM


Google News
ராஜபாளையம்: ராஜபாளையம் ஸ்ரீ ரமண வித்யாலயா மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.

ஜெயஜோதி மில் நிர்வாக இயக்குனர் கோகுல் கண்ணன் தலைமை வகித்தார். முதல்வர் சுதா ஆண்டறிக்கை வாசித்தார். தாளாளர் கிருஷ்ணவேணி கண்ணன் வரவேற்றார்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுமதி பேசியதாவது, தனது மாணவனை உயர்த்தி, தம்மால் அடைய முடியாத வளர்ச்சியை பெற்று இருந்தாலும் அது குறித்து பெருமைப்படுபவனே ஆசிரியன்.

ஆசிரியர்கள் என்பவர் கற்றுக் கொடுப்பவர் மட்டுமல்ல. மாணவர்களிடமும் பல நேரம் கற்றுக்கொள்ள வேண்டும். கனவில் காணும் ஆசைகளுக்கு நாம் எப்போது உழைக்க துவங்குகிறோமோ அப்போது அவை நனவாக மாறும் என்றார். விழாவில் பள்ளி ஆலோசகர் டாக்டர். கு கணேசன் எழுதி தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிட் பதிப்பான நோ யுவர் பாடி ஆங்கில புத்தகத்தை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுமதி வெளியிட பள்ளி நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.

பள்ளியில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அலுவலர்கள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us