/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுடன் பயணிப்போம் சொல்கிறார் ஜவாஹிருல்லா சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுடன் பயணிப்போம் சொல்கிறார் ஜவாஹிருல்லா
சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுடன் பயணிப்போம் சொல்கிறார் ஜவாஹிருல்லா
சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுடன் பயணிப்போம் சொல்கிறார் ஜவாஹிருல்லா
சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுடன் பயணிப்போம் சொல்கிறார் ஜவாஹிருல்லா
ADDED : ஜூன் 29, 2025 02:26 AM
அருப்புக்கோட்டை:''சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுடன் பயணிப்போம் ''என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாவட்ட ஜமாத் நிர்வாகிகள் , உலமாக்கள் சந்திப்பு நடந்தது. இதில் பங்கேற்ற பின்னர் அவர் கூறியதாவது :
மதுரையில் ஜூலை 6 ல் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடக்கிறது. உள்ளாட்சி முதல் பார்லிமென்ட் வரை முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் பார்லிமென்ட் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது. இந்தியாவில் 15 சதவீத முஸ்லிம்கள் உள்ள நிலையில், லோக்சபாவில் 80 பேர் முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால் 24 பேர் தான் உள்ளனர். அனைத்து சட்டசபைகளிலும் ,உள்ளாட்சிகளிலும் இதே அவல நிலைதான் இருக்கிறது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ப் திருத்த சட்டத்தை சமூக நல்லிணக்கம் கொண்ட அனைத்து கட்சிகளும் எதிர்க்கின்றன. கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. வரும் சட்டசபை தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி தி.மு.க.,வுடன் இணைந்து பயணிக்கும். 234 தொகுதிகளில் தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களின் கணக்குப்படி 14 எம்.எல்.ஏ.,க்கள் இருக்க வேண்டும். தற்போது 7 பேர் தான் உள்ளனர். எனவே அதிக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைப்போம் என்றார்.