ADDED : பிப் 06, 2024 12:11 AM

சிவகாசி : சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் 61 வது விளையாட்டு விழா நடந்தது.
அய்யன் பயர் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் அய்யன் அதீந்திரன் துவக்கி வைத்து தேசியக்கொடி ஏற்றினார். மாணவன் செந்தில்குமார் ஒலிம்பிக் தீபம் ஏற்றினார். மாணவி ஹரிணி தலைமையில் விளையாட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்திய ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் முகமது ரியாஸ் ஒலிம்பிக் கொடி ஏற்றினார்.
கல்லுாரி முதல்வர் அசோக் கல்லுாரி கொடி ஏற்றினார்.
தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. பிரமிடு சறுக்குமரம், யோகா, ஏரோபிக் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
தொழிலதிபர் ஐஸ்வர்யா விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கினார். உடற்கல்வித்துறை இயக்குனர் பால் ஜீவ சிங் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். மாணவன் குமரேசன் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை முதல்வர், உடற்கல்வித்துறை இயக்குனர், உடற்கல்வியியல் துறை தலைவர்கள் சுரேஷ்பாபு, ஜான்சன், உடற் கல்வியியல் துறை உதவி இயக்குனர் கவிதா, துறை பேராசிரியர்கள் செய்தனர்.