/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தென் மாவட்ட ரயில்கள் 'ஹவுஸ்புல்' பொங்கலுக்கு தேவை சிறப்பு ரயில்கள்தென் மாவட்ட ரயில்கள் 'ஹவுஸ்புல்' பொங்கலுக்கு தேவை சிறப்பு ரயில்கள்
தென் மாவட்ட ரயில்கள் 'ஹவுஸ்புல்' பொங்கலுக்கு தேவை சிறப்பு ரயில்கள்
தென் மாவட்ட ரயில்கள் 'ஹவுஸ்புல்' பொங்கலுக்கு தேவை சிறப்பு ரயில்கள்
தென் மாவட்ட ரயில்கள் 'ஹவுஸ்புல்' பொங்கலுக்கு தேவை சிறப்பு ரயில்கள்
ADDED : ஜன 07, 2024 02:14 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்:சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிந்து காத்திருப்பு பட்டியலில் ஏராளமானோர் உள்ளதால் பொங்கல் பண்டிகையையொட்டி ஜன.,12 முதல் 30 வரை சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முன் வர வேண்டும்.
சென்னையில் இருந்து மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு தினமும் வைகை, பாண்டியன், தேஜஸ், குருவாயூர், வந்தே பாரத், திருச்செந்தூர், கொல்லம், கன்னியாகுமரி, நாகர்கோவில், முத்துநகர், அனந்தபுரி, நெல்லை, பொதிகை உள்ளிட்ட 13 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர சிலம்பு போன்ற வாரம் மூன்று நாட்கள் இயங்கும் ரயில்களும் இயக்கப்படுகின்றன.
சாதாரண நாட்களிலேயே இந்த ரயில்களில் இரண்டு மாதங்களுக்கு முன்பதிவு செய்தால் மட்டுமே படுக்கை வசதி உள்ளிட்ட டிக்கெட் கிடைக்கும். இந்த ரயில்களில் பொங்கலுக்காக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு சென்று திரும்ப டிக்கெட் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் ஏராளமோனார் உள்ளனர். முதியவர்கள், பெண்களுடன் பயணிக்க ரயில்கள் வசதியாக இருப்பதால் முன்பதிவு செய்வது அதிகம் உள்ளது.
எனவே ஜனவரி 12 முதல் 30 வரை தென் மாவட்டங்களுக்கு இரவு கூடுதல் சிறப்பு ரயில்களும், பகலில் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களை இயக்கவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.