ADDED : பிப் 25, 2024 06:18 AM
விருதுநகர் : விருதுநகர் கே.வி.எஸ்., நடுநிலைப்பள்ளியில் தமிழக ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம், விருதுநகர் மில்லட் புரமோஷனல் சொசைட்டி, விருதுநகர் இன்டஸ் பிரதான், அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து நடத்திய சிறுதானிய திருவிழாவை டி.ஆர்.ஒ., ராஜேந்திரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிறுதானிய உற்பத்தி, ஆரோக்கியம், மதிப்பு கூட்டுவது, தொழில் முனைவோர் பயிற்சி, சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி செய்தல் குறித்த அரசுத்துறை அரங்குகள், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களை ச்சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைத்திருந்த அரங்குகளை மாணவர்கள், மக்கள் பார்வையிட்டனர்.