/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சிவகாசியில் பணியாளர்கள் இல்லை; தூய்மை பணிகளில் தொய்வுசிவகாசியில் பணியாளர்கள் இல்லை; தூய்மை பணிகளில் தொய்வு
சிவகாசியில் பணியாளர்கள் இல்லை; தூய்மை பணிகளில் தொய்வு
சிவகாசியில் பணியாளர்கள் இல்லை; தூய்மை பணிகளில் தொய்வு
சிவகாசியில் பணியாளர்கள் இல்லை; தூய்மை பணிகளில் தொய்வு
ADDED : ஜன 31, 2024 12:02 AM
சிவகாசி : சிவகாசி மாநகராட்சியில் போதிய பணியாளர்கள் இல்லாததால் துாய்மை பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் நகரில் குப்பை தேங்கியும் வாறுகால் துார்வாராததாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மாநகராட்சிகள், நகராட்சிகளில் சுகாதார பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொள்ள அனுமதி அளித்து, அனைத்து நகராட்சிகள் மாநகராட்சிகளில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதற்கான டெண்டர் வெளியிடப்பட்டது. புதிய ஒப்பந்தத்தில் குப்பைகளை சேகரித்தல், வாறுகால் துார்வாருதல், திடக்கழிவு மேலாண்மை உள்ள அனைத்து பணிகளையும், அதற்கு தேவையான உபகரணங்கள், வாகனங்களை தானியாரே ஏற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
நகராட்சிகளில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட குப்பை அள்ளும் வாகனங்கள், லாரிகள், ஆகியவை ஒப்பந்தம் எடுத்தவர்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சிவகாசி மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு ரூ.54 டன் குப்பை சேகரிப்பதற்கு ரூ.8.81 கோடி மதிப்பில் துாய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்வதற்கு அனுமதி அளித்து ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில் பணியாளர்கள் அடிப்படையில் இல்லாமல் சேகரமாகும் குப்பை அடிப்படையிலேயே ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதால், ஒப்பந்தம் எடுத்தவர்கள் 70 சதவீதம் பணியாளர்களை வைத்தே துாய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மாநகராட்சியில் ஆங்காங்கே பொது இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமலும் வாறுகால் துார்வாரப்படாமலும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே கூடுதல் துாய்மை பணியாளர்களை நியமித்து சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.