/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ புதர்மண்டிய ஓடைகள், விஷப்பூச்சிகள் நடமாட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் அச்சம் புதர்மண்டிய ஓடைகள், விஷப்பூச்சிகள் நடமாட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் அச்சம்
புதர்மண்டிய ஓடைகள், விஷப்பூச்சிகள் நடமாட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் அச்சம்
புதர்மண்டிய ஓடைகள், விஷப்பூச்சிகள் நடமாட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் அச்சம்
புதர்மண்டிய ஓடைகள், விஷப்பூச்சிகள் நடமாட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் அச்சம்

அப்புறப்படுத்த வேண்டும்
கோவிந்தராஜ், விவசாயி: வடமலைக்குறிச்சி கண்மாய் நீர்வரத்து பாதை பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது. இதை முழு அளவில் அப்புறப்படுத்தி சரி செய்தால் மட்டுமே மழை நேரத்தில் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து ஏற்படும்.
விஷ பூச்சிகள் நடமாட்டம்
சமுத்திரம், சுய தொழில் முனைவோர்: செங்குளம் கண்மாயை ஒட்டி பல்வேறு வீடுகள் உள்ளது. இந்த கண்மாயில் கழிவுகள் தேங்கி சுகாதாரக் கேடு காணப்படுகிறது. விஷ பூச்சிகள் நடமாட்டம் அச்சப்பட வைக்கிறது. குடிநீர் குழாய்கள் பாதிக்கப்படுகிறது.
தடுப்பு சுவர் வேண்டும்
மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி: நகராட்சி அலுவலகத்தின் பின்புறத்தில் இருந்து கிருஷ்ணன் கோயில் தெருவிற்கு செல்லும் வழியில் உள்ள நீர்வரத்து ஓடையில் கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதாரக் கேடு காணப்படுகிறது. செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இரவு நேரங்களில் பாம்புகள் ரோட்டை கடந்து செல்கிறது. எனவே, இந்த நீர்வரத்து பாதையை முழு அளவில் சுத்தம் செய்து தடுப்பு சுவர் வேண்டும்.