ADDED : பிப் 11, 2024 01:32 AM
சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் எதிர்கோட்டையில் சிவகாசி வேலாயுதா ரஸ்தா ரோடு பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான பிருந்தா பயர் ஒர்க்ஸ் உள்ளது.
இங்கு வெம்பக்கோட்டை தாசில்தார் முத்து பாண்டீஸ்வரி, பட்டாசு தாசில்தார் திருப்பதி, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆலையில் பட்டாசு தயாரிக்க தடை செய்யப்பட்ட பேரியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட சரவெடி தயாரித்து கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து பட்டாசு ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதேபோல் விருதுநகர் அருகே பி.ராமலிங்கபுரத்தில் நாரணாபுரத்தைச் சேர்ந்த பொன் குமாருக்கு சொந்தமான கவுதம் பெயர் ஒர்க்ஸில் தடை செய்யப்பட்ட சரவெடி தயாரித்தனர். அதிகாரிகள் இந்த பட்டாசு ஆலைக்கும் சீல் வைத்தனர்.