ADDED : செப் 11, 2025 05:31 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் வருவாய் மாவட்ட அளவிலான ஜூடோ போட்டி சிவகாசி ஜேசீஸ் பள்ளியில் நடந்தது.
இதில் ஸ்ரீவி லயன்ஸ் பள்ளி மாணவர்கள் 55 கிலோவிற்கு கீழ் உள்ள எடை பிரிவில் மாணவர் ராஜேஷ், 81 கிலோவிற்கு கீழ் உள்ள எடை பிரிவில் மாணவர் அரவிந்த் குமார் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.
மேலும் பல்வேறு கிலோ எடை பிரிவில் மாணவர்கள் யோக முனீஸ் வரன், மாதேஷ் ஆதித்யன், முனீஸ் கண்ணன், சாய்சரண், மணீஷ், ஸ்ரீ லக்ஸ்மன் மூன்றாம் இடம் பெற்றனர்.
சாதனை மாணவர்களையும், உடற் கல்வி ஆசிரியர்களையும் பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி, இயக்குனர் கோபால கிருஷ்ணன், முதல்வர் சுந்தர மகாலிங்கம், துணை முதல்வர் முகமது மைதீன், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.