ADDED : ஜன 07, 2024 03:59 AM
மாணவ விஞ்ஞானி பயிற்சி முகாம்
சிவகாசி: சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் தமிழ்நாடு அரசு மாநில அறிவியல் தொழில்நுட்பக் கழகம் சார்பில் இளம் அறிவியல் மாணவ விஞ்ஞானி பயிற்சி முகாம் நடந்தது.
கல்லுாரி ஆட்சி குழு உறுப்பினர் அதிபன் போஸ் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் சிதம்பரநாதன் துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் அசோக் முன்னிலை வகித்தார். விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டபள்ளிகளை சேர்ந்த 9 ம் வகுப்பு மாணவர்கள் 92 பேர் பங்கேற்றனர். 15 நாட்களுக்கு சம்பந்தப்பட்ட துறை வல்லுனர்களால் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாணவர்கள் உருவாக்கிய அறிவியல் கண்டுபிடிப்பு மாதிரி கண்காட்சி நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தரேசன், அருள் சங்கர் செய்தனர். கல்லுாரி தாளாளர் அபிரூமன் பாராட்டினார்.
விளையாட்டு விழா
சிவகாசி: சிவகாசி ரிசர்வ்லைன் லார்டு பி.சி.ஏ.ஏ., லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 13 வது விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது.
விருதுநகர் மாவட்ட தனியார் பள்ளிகள் கல்வி அலுவலர் ஜான் பாக்கிய செல்வம் தேசியக்கொடி ஏற்றி வைத்து துவக்கி வைத்தார். பள்ளி தலைவர் ரத்தினசேகர் ஒலிம்பிக் கொடி ஏற்றினார். பொருளாளர் கண்ணன் பள்ளி கொடி ஏற்றினார். தாளாளர் ரவீந்திரன் வரவேற்றார்.
பள்ளி முதல்வர் காளீஸ்வரன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். உடற்கல்வி ஆசிரியர் பாலகணேஷ் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். மாணவர்களின் அணிவகுப்புகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் நடந்தது.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.