/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தனியார் நிறுவனத்தில் ரூ.4.47 லட்சம் கையாடல் விற்பனையாளர் கைது தனியார் நிறுவனத்தில் ரூ.4.47 லட்சம் கையாடல் விற்பனையாளர் கைது
தனியார் நிறுவனத்தில் ரூ.4.47 லட்சம் கையாடல் விற்பனையாளர் கைது
தனியார் நிறுவனத்தில் ரூ.4.47 லட்சம் கையாடல் விற்பனையாளர் கைது
தனியார் நிறுவனத்தில் ரூ.4.47 லட்சம் கையாடல் விற்பனையாளர் கைது
ADDED : ஜூன் 01, 2025 03:43 AM

விருதுநகர்: விருதுநகரில் வி.ஆர்.முத்து அண்ட் பிரதர்ஸ் நிறுவனத்தில் ரூ. 4.47 லட்சம் கையாடல்செய்த விற்பனையாளர் தங்கராஜ், பஜார் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மெயின் பஜாரில் வி.ஆர். முத்து அண்ட் பிரதர்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் 1999-2000ம் ஆண்டில் விற்பனையாளராக கட்டையாபுரத்தைச் சேர்ந்த தங்கராஜ் 52, பணிபுரிந்தார். இவர் சரக்கு விற்பனையில் ரூ. 4 லட்சத்து 47 ஆயிரத்து 100 கையாடல் செய்தார். பஜார் போலீசார் வழக்கு பதிந்தனர்.
இந்த வழக்கில் ஸ்ரீவில்லிப்புத்துார் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2 நீதிமன்றம் 2011 ஜூன் 24ல் தங்கராஜ், ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 3500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தங்கராஜ் தொடர்ந்த மேல் முறையீட்டில் நீதிபதி டி.வி., ஹேமானந்த குமார், 2025 ஏப். 24ல் தண்டனையை உறுதி செய்து உடனடியாக சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறக்கப்பட்டு விருதுநகர் பஜார் போலீசார் நேற்று தங்கராஜ் கைது செய்தனர்.