/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பராமரித்தும் பயனில்லா சுகாதார வளாகம், தேங்கும் கழிவுநீர் பராமரித்தும் பயனில்லா சுகாதார வளாகம், தேங்கும் கழிவுநீர்
பராமரித்தும் பயனில்லா சுகாதார வளாகம், தேங்கும் கழிவுநீர்
பராமரித்தும் பயனில்லா சுகாதார வளாகம், தேங்கும் கழிவுநீர்
பராமரித்தும் பயனில்லா சுகாதார வளாகம், தேங்கும் கழிவுநீர்
தரிசனா வயல்கள்
ராஜாராம், விவசாயி: கண்மாய் தூர்வராமல் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து கிடக்கின்றன. மடைகள் சேதம் ஆகின. மழைநீர் வரத்து இருந்தும் சேமிக்க முடியாமல் வீணாக வெளியேறி வருகிறது. விவசாயம் செய்ய முடியவில்லை. வயல்கள் தரிசுகளாக கிடக்கின்றன. மழை நீர் வீணாவதை தடுக்க, சேதமான மடைகளை சீரமைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
ரமேஷ் பாபு, தனியார் ஊழியர்: 4வது வார்டில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு சேதம் அடைந்தது. 6 மாதங்களுக்கு முன் சீரமைக்கப்பட்டது. தற்போது நல்ல நிலைமையில் இருந்தும், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. அரசு நிதி வீணடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேவர் பிளாக் கற்கள்பதிப்பது அவசியம்
தங்கப்பாண்டி, தனியார் ஊழியர்: 7வது வார்டில் வாறுகாலை உயரத்தி கட்டினர். வீடுகளில் இருந்து வரும் கழிவு நீர் வாறுகாலில் செல்லாமல் வீதியில் செல்கிறது. சேறும் சகதியுமாக கிடப்பதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை.