Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ரூ. 80 லட்சம் மோசடி

ரூ. 80 லட்சம் மோசடி

ரூ. 80 லட்சம் மோசடி

ரூ. 80 லட்சம் மோசடி

ADDED : பிப் 25, 2024 05:52 AM


Google News
சிவகாசி : வத்திராயிருப்பு குளத்துாரை சேர்ந்தவர் முருகன் 42. இவரிடம் சிவகாசி ஞானகிரி ரோடு பகுதியைச் சேர்ந்த முத்துவேல், இவரது மனைவி ஜெயந்தி ஆகியோர் மதுரையில் உள்ள தங்களுக்கு சொந்தமான வணிக வளாக கட்டடத்தை 2023 ஜன. ல் பொது அதிகார ஆவண பத்திரம் செய்து கொடுத்து ரூ 80 லட்சம் கடன் வாங்கி இருந்தனர்.

இந்நிலையில் முருகன், தனக்குத் தெரிந்தவருக்கு அந்த வணிக வளாகத்தை கிரயம் பேசி முடிப்பதற்கு ஏற்பாடு செய்து 2024 பிப். 2 ல் மதுரை சார் பதிவாளர் அலுவலகத்தில் சென்று பார்த்தபோது, முத்துவேல் ஜெயந்தி ஆகியோர் பொது அதிகார ஆவண பத்திரத்தை 2024 ஜன. 24 ல் ரத்து செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை தொடர்பு கொண்டு முருகன் பணத்தை கேட்டார். அவர்கள் பணத்தை தர மறுத்தனர் கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us