/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஆண்டுகள் கடந்தும் போடப்படாத ரோடுகள்: மக்கள் கடும் அவதிஆண்டுகள் கடந்தும் போடப்படாத ரோடுகள்: மக்கள் கடும் அவதி
ஆண்டுகள் கடந்தும் போடப்படாத ரோடுகள்: மக்கள் கடும் அவதி
ஆண்டுகள் கடந்தும் போடப்படாத ரோடுகள்: மக்கள் கடும் அவதி
ஆண்டுகள் கடந்தும் போடப்படாத ரோடுகள்: மக்கள் கடும் அவதி
ADDED : ஜன 06, 2024 05:18 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஆண்டுகள் பல கடந்தும் ஊரகப்பகுதிகளில் புதிதாக போடாததால் அதன் தார் பெயர்ந்து மேடு, பள்ளங்களாக போக்குவரத்துக்கே பயனற்றதாக உள்ளது.
ஊரகப்பகுதிகளில் தார் ரோடு அமைத்தால் 3 ஆண்டுகள் கழித்து பேட்ஜ் பணிகளும், 5 ஆண்டுகள் முடிந்ததும் புதிய ரோடு போடும் பணிகளும் நடக்க வேண்டும். ஆனால் மாவட்டத்தின் பல ஒன்றியப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் இன்று வரை 10, 15, 20 ஆண்டுகள் வயதான ரோடுகள் இருக்குமிடமே தெரியாது, தார் பெயர்ந்து மண் ரோடாகவும், சில நேரங்களில் ஜல்லி ரோடாகவும் இருக்கின்றன.
புதிய ரோடு கோரி மக்கள் மனு அளித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.அருப்புக்கோட்டை ஒன்றியம் வில்லிபத்திரி ஊராட்சி சின்னவள்ளிக்குளத்தில் அமைந்துள்ள தார் ரோடு 8 ஆண்டுகள் ஆகியும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது.
தற்போது தார் பெயர்ந்து மண், ஜல்லி கற்களாய் காணப்படுவதால் வாகனங்களை ஓட்டுவோர் எளிதில் வழுக்கி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.
நிறைய மக்கள் இந்த கிராமத்தில் இருந்து விருதுநருக்கு வியாபாரம், தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வருகின்றனர். இந்த ரோட்டை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் ஊரக பகுதிகளில் 5 ஆண்டுகள் கடந்து போடாத ரோடுகளை சரி செய்து போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.