/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ராஜதுரை நகரில் தெருக்களில் ரோடு சேதம்ராஜதுரை நகரில் தெருக்களில் ரோடு சேதம்
ராஜதுரை நகரில் தெருக்களில் ரோடு சேதம்
ராஜதுரை நகரில் தெருக்களில் ரோடு சேதம்
ராஜதுரை நகரில் தெருக்களில் ரோடு சேதம்
ADDED : ஜன 28, 2024 07:11 AM

சிவகாசி, : சிவகாசி அருகே பூலாவூரணி ஊராட்சி ராஜதுரை நகரில் தெருக்களில் சேதம் அடைந்த ரோடுகளால் குடியிருப்பு வாசிகள் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி அருகே பூலாவூரணி ஊராட்சிக்கு உட்பட்ட ராஜதுரை நகரில் 30க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்குள்ள 20 க்கும் மேற்பட்ட தெருக்களில் ரோடு சேதமடைந்துள்ளது.
பெரும்பான்மையான தெருக்களில் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் ரோடு சகதியாக மாறி விடுவதால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகின்றது. டூவீலர்களில் செல்பவர்கள் அடிக்கடி தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே ராஜதுரை நகரில் தெருக்களில் சேதம் அடைந்த ரோடுகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.