/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நாணல்களால் தேங்கும் கழிவுநீர், குழாய் பதித்த பள்ளங்கள் சிரமத்தில் காரியாபட்டி பேரூராட்சி மக்கள் நாணல்களால் தேங்கும் கழிவுநீர், குழாய் பதித்த பள்ளங்கள் சிரமத்தில் காரியாபட்டி பேரூராட்சி மக்கள்
நாணல்களால் தேங்கும் கழிவுநீர், குழாய் பதித்த பள்ளங்கள் சிரமத்தில் காரியாபட்டி பேரூராட்சி மக்கள்
நாணல்களால் தேங்கும் கழிவுநீர், குழாய் பதித்த பள்ளங்கள் சிரமத்தில் காரியாபட்டி பேரூராட்சி மக்கள்
நாணல்களால் தேங்கும் கழிவுநீர், குழாய் பதித்த பள்ளங்கள் சிரமத்தில் காரியாபட்டி பேரூராட்சி மக்கள்
ADDED : செப் 20, 2025 11:22 PM

காரியாபட்டி: நாணல் புற்களால் ஓடையில் கழிவுநீர் செல்ல தடை ஏற்படுத்துவது, ஜல் ஜீவன் திட்ட குழாய் பதிக்க தோட்டிய வீதிகளை சரி வர மூடாததால் ஏற்பட்ட பள்ளத்தால் காரியாபட்டி பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
காரியாபட்டியில் மதுரை -- தூத்துக்குடி நான்கு வழி சாலை கள்ளிக்குடி பிரிவு ரோட்டில் ஏராளமான வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக வந்து செல்கின்றன. நீண்ட தூரத்தில் வருவதாக நினைத்து கடக்க முற்படும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
மக்கள் படாதபாடு படுகின்றனர். மேம்பாலம் கட்ட வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.
அரசு மருத்துவமனை பகுதியில் இருந்து சக்தி மாரியம்மன் கோயில் வழியாக கே. கரிசல்குளம் கண்மாய்க்கு செல்லும் நீர்வரத்து ஓடையில் குப்பை தேங்கி நிற்கிறது. கொசுக்கள் உற்பத்தியாகி பகலிலே கடிக்கிறது.
நாணல்கள் வளர்ந்துள்ளதால் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. வீதியில் ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடாததால் ஆட்கள் கூட நடந்து செல்ல முடியவில்லை. மயான ரோடு சேதமடைந்துள்ளதால் வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. அப்பகுதியில் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் இடறி விழுகின்றனர். தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.