/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஸ்ரீவி., திருவண்ணாமலை கோயிலில் புரட்டாசி முதல் சனி உற்ஸவம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் ஸ்ரீவி., திருவண்ணாமலை கோயிலில் புரட்டாசி முதல் சனி உற்ஸவம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
ஸ்ரீவி., திருவண்ணாமலை கோயிலில் புரட்டாசி முதல் சனி உற்ஸவம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
ஸ்ரீவி., திருவண்ணாமலை கோயிலில் புரட்டாசி முதல் சனி உற்ஸவம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
ஸ்ரீவி., திருவண்ணாமலை கோயிலில் புரட்டாசி முதல் சனி உற்ஸவம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
ADDED : செப் 20, 2025 11:22 PM

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனி உற்ஸவத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று அதிகாலை 2:00 மணி முதல் பக்தர்கள் கோயிலில் குவியத் துவங்கினர். அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சுப்ரபாதபாத பூஜை ,சிறப்பு மஞ்சனம் நடந்தது. இதனை அடுத்து ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர்.
காலை 11:00 மணிக்கு ஆண்டாள் கோயிலில் சீனிவாச பெருமாள் புறப்பட்டு கருட சேவைக்காக திருவண்ணாமலை அடிவார மண்டபம் வந்தடைந்தார். அங்கு மதியம் 12:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலை 4:00 மணிக்கு கிரிவலம் வருதல் நடந்தது.
விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள் தலைமையில் கோயில் பட்டர்கள், அறநிலைத்துறையினர் செய்திருந்தனர். டி.எஸ்.பி.ராஜா தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அனைத்து நகரங்களில் இருந்தும் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
செண்பகத் தோப்பு காட்டழகர் கோயில், வத்திராயிருப்பு சேது நாராயண பெருமாள் கோயில், அழகிய சாந்த மணவாள பெருமாள் கோயில்களில் புரட்டாசி முதல் சனி உற்ஸவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ராஜபாளையம்: ராஜபாளையம் பழைய பாளையம் ராமசாமி கோயிலில் அதிகாலை முதல் அலங்காரம் பூஜை நடந்தது. இதேபோல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோயில், வேட்டை வெங்கடேச பெருமாள் கோயில், கோதண்டராமசாமி கோயில், சம்பந்தபுரம் சோலைமலை பெருமாள் கோயில், செல்லம் பெருமாள் கோயில், ஆவாரம்பட்டி சோலைமலை பெருமாள் கோயில், பெரிய கடை பஜார் ஹரிஹர பெருமாள் கோயில், வடகரை திருவேங்கடமுடையான் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.