/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்புகிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்பு
கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்பு
கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்பு
கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்பு
ADDED : ஜன 31, 2024 12:04 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கிணற்றில் விழுந்த புள்ளி மானை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.
அருப்புக்கோட்டை அருகே ராம நாயக்கன்பட்டியை சேர்ந்த அய்யம்பெருமாள் தோட்டத்தில் 36 அடி ஆழ கிணற்றில் நேற்று காலை அந்த பகுதியில் தண்ணீர் தேடி வந்த புள்ளி மான் தவறி கிணற்றுக்குள் விழுந்தது.
இது குறித்து விவசாயி அருப்புக்கோட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜ் தலைமையில் வீரர்கள் புள்ளிமானை உயிருடன் மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.