/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சிவகாசி ஜக்கம்மாள் கோயில் பகுதியில் சேதமடைந்த ரோடு சீரமைப்புசிவகாசி ஜக்கம்மாள் கோயில் பகுதியில் சேதமடைந்த ரோடு சீரமைப்பு
சிவகாசி ஜக்கம்மாள் கோயில் பகுதியில் சேதமடைந்த ரோடு சீரமைப்பு
சிவகாசி ஜக்கம்மாள் கோயில் பகுதியில் சேதமடைந்த ரோடு சீரமைப்பு
சிவகாசி ஜக்கம்மாள் கோயில் பகுதியில் சேதமடைந்த ரோடு சீரமைப்பு
ADDED : ஜன 04, 2024 01:37 AM

சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி ஜக்கம்மாள் கோயில் அருகே சேதமடைந்த ரோடு உடனடியாக சீரமைக்கப்பட்டது.
சிவகாசி ஜக்கம்மாள் கோயில் எதிரே பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் மெயின் ரோட்டில் வேகத்தடை அருகே ரோடு சேதமடைந்து மிகப்பெரிய பள்ளமாக உள்ளது.
வளைவு பகுதி என்பதால் வாகனங்கள் இந்த பள்ளத்தை கவனிக்காமல் விபத்தில் சிக்கி வந்தனர்.
இரவில் டூவீலரில் வருபவர்கள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைந்தனர்.
மேலும் எதிர எதிரே வரும் வாகனங்கள் விலகிச் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டது.
மேலும் இதனைக் கடந்து தினமும் ஏராளமான பள்ளி மாணவர்கள் செல்கின்றனர். இவர்களும் பெரிதும் அவதிப்பட்டனர். காலை, மாலை இப்பகுதியில் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இந்நிலையில் ரோடு சேதம் அடைந்து இருப்பதால் வாகனங்கள் எளிதில் செல்ல முடியவில்லை.
எனவே உடனடியாக சேதம் அடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக அப்பகுதியில் சேதம் அடைந்த ரோடு உடனடியாக சீரமைக்கப்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.