/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஊக்க தொகை உயர்த்த கோரும் ரேஷன் ஊழியர் சங்கம்ஊக்க தொகை உயர்த்த கோரும் ரேஷன் ஊழியர் சங்கம்
ஊக்க தொகை உயர்த்த கோரும் ரேஷன் ஊழியர் சங்கம்
ஊக்க தொகை உயர்த்த கோரும் ரேஷன் ஊழியர் சங்கம்
ஊக்க தொகை உயர்த்த கோரும் ரேஷன் ஊழியர் சங்கம்
ADDED : ஜன 25, 2024 01:41 AM
விருதுநகர்:தமிழக அரசு வழங்கிய ஊக்கத்தொகை 50 காசை குறைந்தபட்சம் ரூ.10 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், என தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: தமிழக அரசு எல்லாவித மக்கள் நல திட்ட பணிகளை ரேஷன் ஊழியர்கள் மூலம் செய்து வருகிறது. மகளிர் உரிமை தொகை திட்டம், பொங்கல் பரிசு தொகுப்புக்கு பணிகளுக்காக ஒரு வார காலமாவது கூடுதலாக உதவிக்கு ஆட்களை வைத்து மக்களிடம் நேரடியாக சென்று பணிகளை செய்து முடித்துள்ளனர்.
இப்பணிகளுக்கான ஊக்க தொகையாக கார்டு ஒன்றுக்கு ரூ.20 வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால் அரசோ 50 காசு ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. இது ஏற்கதக்கதே அல்ல. எனவே அரசு உடனடியாக குறைந்தபட்சம் கார்டு ஒன்றுக்கு ரூ.10 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், என கேட்டுள்ளார்.