/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஆண்டாள் கோயிலில் ராப்பத்து உற்ஸவம் நிறைவுஆண்டாள் கோயிலில் ராப்பத்து உற்ஸவம் நிறைவு
ஆண்டாள் கோயிலில் ராப்பத்து உற்ஸவம் நிறைவு
ஆண்டாள் கோயிலில் ராப்பத்து உற்ஸவம் நிறைவு
ஆண்டாள் கோயிலில் ராப்பத்து உற்ஸவம் நிறைவு
ADDED : ஜன 03, 2024 05:43 AM

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ராப்பத்து உற்ஸவம் நம்மாழ்வார் மோட்சம் மற்றும் இயற்பா சாத்து முறையுடன் நேற்று முடிவடைந்தது. ஜன.8 முதல் 15 வரை எண்ணெய் காப்பு உற்ஸவம் நடக்கிறது.
இக்கோயிலில் டிச 13ல் பச்சைப் பரத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கிய பகல் பத்து உற்ஸவம் ஜனவரி 1ல் முடிவடைந்தது. டிச.23 அன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா டந்தது. இதனையடுத்து அன்று முதல் ராப்பத்து உற்ஸவம் துவங்கியது. 10 நாட்களாக நடந்த இத் திருவிழாவில் நேற்று முன்தினம் நம்மாழ்வார் மோட்சமும், நேற்று இயற்பா சாத்துமுறையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து நேற்றுடன் ராப்பத்து உற்ஸவம் முடிவடைந்தது.
ஜன 7 அன்று பிரியாவிடையும், ஜன 8 முதல் 15 வரை ஆண்டாள் எண்ணெய் காப்பு உற்ஸவமும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் செயல் அலுவலர் முத்துராஜா, கோயில் பட்டர்கள் செய்துள்ளனர்.