ADDED : ஜன 28, 2024 06:20 AM
காரியாபட்டி, : காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி ஒன்றியங்களைச் சேர்ந்த 156 ஏழை பெண்களுக்கு ரூ. 74 லட்சத்து 44 ஆயிரத்து 202 மதிப்பில் 8 கிராம் தங்க நாணயங்கள், ரூ. 55 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் திருமண நிதி உதவிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி, மாவட்ட சமூக நலன் மகளிர் உரிமை துறை அலுவலர் ஷீலா சுந்தரி, பேரூராட்சி தலைவர் செந்தில், ஒன்றிய தலைவர் முத்துமாரி, மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், ஒன்றிய செயலாளர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.