ADDED : மார் 23, 2025 07:15 AM
விருதுநகர்: விருதுநகரில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் 19 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.55 கோடிக்கு கடனுதவிகளையும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 50 நெசவாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.25 லட்சம் மதிப்பிலான முத்ரா கடனுதவிகளையும் என மொத்தம் ரூ.1.80 கோடி மதிப்பிலான கடனுதவிகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.பா.செந்தில்குமார், துணைப்பதிவாளர்கள் குருசாமி, அந்தோணி மரிய டயர்ஸ், வீரபாண்டி, கைத்தறி உதவி இயக்குநர் வெங்கடேசலு, வங்கி பொது மேலாளர் சங்கரநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.