
துர்நாற்றத்தால் அவதி
கார்த்திக், சாத்துார்:ஆற்றின்கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலக் காந்திநகர், போக்குவரத்து நகர்,அண்ணா நகர் வசந்தம் நகர் பகுதியில் வைப்பாற்றில் அதிக அளவில் வளர்ந்துள்ள முள் செடியில் இருந்து இரவு நேரத்தில் விஷ பூச்சிகள் குடியிருப்பு பகுதிக்குள் படையெடுத்து வருகின்றன.கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் முள் செடியை அகற்றவும் வேண்டும்.
குடிநீரை விலைக்குவாங்கும் நிலை
அய்யப்பன், சாத்துார்: வைப்பாற்றில் கோடை காலத்தில் ஊற்று தோண்டி தண்ணீர் எடுத்து மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது வருடம் முழுவதும் கழிவுநீர் தேங்கி இருப்பதால் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் விலை உருவாகியுள்ளது.
தீர்வு
ஆற்றில் கழிவுநீர் கலக்கும் இடங்களை கண்டறிந்து அவற்றை ஒருங்கிணைத்து கழிவுநீர் செல்ல தனியாக வாறுகால் கட்ட வேண்டும்.இந்த வாறுகால் மூலம் வரும் கழிவு நீரை சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிப்புக்கு பின் ஆற்றில் கலக்க செய்ய வேண்டும்.