Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மின் கம்பம் மாற்றும் பணியால் 20 நாட்களாக மின்சாரம் துண்டிப்பு

மின் கம்பம் மாற்றும் பணியால் 20 நாட்களாக மின்சாரம் துண்டிப்பு

மின் கம்பம் மாற்றும் பணியால் 20 நாட்களாக மின்சாரம் துண்டிப்பு

மின் கம்பம் மாற்றும் பணியால் 20 நாட்களாக மின்சாரம் துண்டிப்பு

ADDED : ஜூன் 19, 2025 02:47 AM


Google News
ராஜபாளையம்: ராஜபாளையம் அணைத்தலை ஆற்றுபகுதியில் மின் கம்பம் மாற்றும் பணியால் பகலில் மின்சாரம் துண்டிப்பால் 20 நாட்களாக விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜபாளையம் செண்பகத்தோப்புரோடு அணைத்தலை ஆற்று பகுதியில் இருந்து ராக்காச்சி அம்மன் கோயில் வரை செல்லும் பாதையில் நுாற்றுக்கணக்கான ஏக்கர்தென்னை, மா, பலா, வாழை, எள் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இப்பகுதியில் கடந்த 20 நாட்களாக மின் கம்பம் மாற்றும் பணிகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் அமைந்துள்ள 9 டிரான்ஸ்பார்மர்கள் கீழ் உள்ள 120க்கும் அதிகமான மின் இணைப்புகளுக்கு கீழ் வரும் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் மரங்கள் காய்ந்து வருவதுடன் தொடர் விவசாய பணிகள் பாதித்து வருகிறது.

ஸ்ரீராம் விஜய், விவசாயி: தற்போது மா அறுவடை இறுதி கட்டம் எட்டி உள்ள நிலையில் தண்ணீர் பாய்ச்ச வழி இல்லை. காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் தென்னங்கன்றுகள் தண்ணீரின்றி வாடி விடுகிறது. வனவிலங்குகளுக்காக அமைக்கப்பட்ட மின்வேலியும் மின்தடையால் செயல்பாடு இன்றி பாதிக்கிறது. விரைந்து தீர்வு காண வேண்டும்.

மாரியப்பன், உதவி மின் பொறியாளர்: மத்திய அரசின் ஆர்.டி.எஸ்.எஸ் திட்டத்தின் படி மின் அழுத்தம் அதிகம் உள்ள பகுதிகளான ராக்காச்சி அம்மன் கோயில் முதல் தென்றல் நகர் வரை புதிதாக மின் கம்பம் மாற்றும் பணி நடைபெறுகிறது. பகலில் நடக்கும் பணிகளில் விபத்தை தவிர்க்க மின் இணைப்பு துண்டிக்கிறோம். விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளோம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us