/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஐ.ஐ.டி.எம்., ஜே.இ.இ.,ல் தேர்வான மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு ஐ.ஐ.டி.எம்., ஜே.இ.இ.,ல் தேர்வான மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
ஐ.ஐ.டி.எம்., ஜே.இ.இ.,ல் தேர்வான மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
ஐ.ஐ.டி.எம்., ஜே.இ.இ.,ல் தேர்வான மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
ஐ.ஐ.டி.எம்., ஜே.இ.இ.,ல் தேர்வான மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
ADDED : ஜூன் 19, 2025 02:48 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த 14 மாணவர்களை கலெக்டர் ஜெயசீலன் பாராட்டினார்.
கிருஷ்ணன்கோவில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து நான் முதல்வன் திட்டத்தின் கல்லுாரி கனவு நிகழ்வின் மூலம் பயிற்சி, வழிகாட்டுதல் பெற்று அம்ரிதா என்பவர் கிளாட் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று ஜபல்பூரில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகத்திலும், ஆறுமுகம், ஆர்.விஜய் ஆகியோர் ஐ.ஐ.டி.எம்., ஜே.இ.இ நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று புவனேஷ்வரில்உள்ள ஐ.ஐ.டி.எம்., கல்வி நிலையத்திலும் சேர்க்கை பெற்றுள்ளனர். மேலும் வத்திராயிருப்பு மகாராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களின் மகன்களான விஜயகுமார், தினேஷ் ஆகியோர் ஐ.ஐ.எச்.எம்.,லும், சிவகாசி பூவநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் மரியராஜ் பாண்டியன், இந்திய கடல்சார் பல்கலை ஐ.எம்.யு., நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று மரைன் இன்ஜினியரிங் படிப்பிற்கும் தேர்வாகி உள்ளனர். கிருஷ்ணன்கோவில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பயின்று 8 மாணவர்கள் என்.எல்.சி., ஐ.ஐ.டி.எம்., என்.சி.எச்.எம்., ஏ.பி.யு., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயில தேர்ச்சி பெற்றுள்ளனர். பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ள இந்த 14 மாணவர்களை கலெக்டர் ஜெயசீலன் நேரில் அழைத்து பாராட்டி, விருப்புரிமை நிதியிலிருந்து தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.70 ஆயிரம் வழங்கினார்.