/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மனைவியை கழுத்தில் வெட்டிய போலீஸ்காரர் கைது மனைவியை கழுத்தில் வெட்டிய போலீஸ்காரர் கைது
மனைவியை கழுத்தில் வெட்டிய போலீஸ்காரர் கைது
மனைவியை கழுத்தில் வெட்டிய போலீஸ்காரர் கைது
மனைவியை கழுத்தில் வெட்டிய போலீஸ்காரர் கைது
ADDED : ஜூலை 04, 2025 02:52 AM
சிவகாசி: சிவகாசி அருகே சித்துராஜபுரம் கருமன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் 36. இவர் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணிபுரிகிறார். இவரது மனைவி மகாலட்சுமி 29. திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு 8 வயதில் ஆண், 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக இரு ஆண்டுகள் பிரிந்து இருந்தனர். இந்நிலையில் சிவகாசி வந்த விக்னேஷ், குடும்பத் தகராறில் தனது மனைவியின் கழுத்தில் கத்தியால் வெட்டினார். தனது கையையும் கத்தியால் அறுத்துக் கொண்டார். அவரை டவுன் போலீசார் கைது செய்தனர்.