/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விசாரணையில் அடிப்பதை கைவிட வேண்டும் எம்.பி., மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல் விசாரணையில் அடிப்பதை கைவிட வேண்டும் எம்.பி., மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்
விசாரணையில் அடிப்பதை கைவிட வேண்டும் எம்.பி., மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்
விசாரணையில் அடிப்பதை கைவிட வேண்டும் எம்.பி., மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்
விசாரணையில் அடிப்பதை கைவிட வேண்டும் எம்.பி., மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 04, 2025 02:51 AM
விருதுநகர்: விசாரணையில் அடித்து குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கும் செயலை போலீசார் கைவிட வேண்டும் ,என விருதுநகரில் எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விருதுநகர் ஜவுளி பூங்கா பணிகளுக்கு ரூ. 1894 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது வரவேற்கத்தக்கது. திருப்புவனத்தில் விசாரணையின் போது அஜீத்குமார் பலியான சம்பவத்தில் தமிழக அரசு விரைவான நடவடிக்கை எடுக்கிறது. விசாரணையில் அடித்து குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கும் செயலை போலீசார் கைவிட வேண்டும்.
தமிழக போலீஸ்துறையில் அடிப்படையில் மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. விருதுநகரில் எஸ்.பி., கண்ணன் சர்ச்சையாக எச்சரித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. பட்டாசு வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசும், ஆலை நிர்வாகமும் நிவாரணங்களை அளிக்கிறது.
ஆனால் நாக்பூர் லைசென்ஸ் வழங்கும் மத்திய அரசு நிவாரணத்தொகையை வழங்குவதில்லை. மத்திய அரசும் பட்டாசு வெடி விபத்தில் நிவாரணத்தொகை வழங்க வேண்டும்., என்றார்.