ADDED : செப் 08, 2025 06:18 AM
ஸ்ரீவில்லிபுத்துார், செப். ௮-
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் துாரியா மாஞ்சி 24, இவர் வத்திராயிருப்பு அருகே சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் திடீர் உடல்நலகுறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார்.
பின் ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நத்தம் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.