கத்திக்குத்து: 11 பேர் மீது வழக்கு
சாத்துார்: சாத்துார் கத்தாளம்பட்டியை சேர்ந்தவர் துர்க்கை பாண்டியன், 30. மின்சார வாரியத்தில் கேங் மேனாக பணிபுரிந்து வருகிறார்.
முதியவர் காயம்
சாத்துார்: சென்னையைச் சேர்ந்தவர் சீனிவாசன், 60. சாத்துார் ஒ.மேட்டுப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு விடுமுறைக்கு வந்துள்ளார்.நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு பேத்தி மதுமிதாவுடன் வாக்கிங் சென்ற போது ஏழாயிரம்பண்ணை ரோட்டில்அடையாளம் தெரியாத ஆட்டோ மோதியதில் படுகாயம் அடைந்து சாத்துார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வங்கி ஊழியர் மாயம்
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கோட்டையூரை சேர்ந்தவர் அருண்குமார் 25,. இவர் ஸ்ரீவில்லிபுத்துார் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை.
கல்லுாரி மாணவர் மாயம்
சாத்துார்: சாத்துார் தென்றல் நகரை சேர்ந்தவர் மாரிச்சாமி மகன் சரவணகுமார், 23. பி.இ.மெக்கானிக் 2ம் ஆண்டு படித்து வருகிறார். மே 26ல் விருதுநகர் சென்றவர் மாயமானார்.
சிறுமி மாயம்
சாத்துார்: சாத்துார் அமீர் பாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுமி நேற்று முன்தினம் காலையில் போஸ்ட் ஆபிஸ் சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றவர் மாயமானார்.
பெண் மாயம்
சாத்துார்: சாத்துார் அருகே சல்வார் பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி 52. இவரது மகள் அனுசியா, 20. நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணிக்கு வெளியில் சென்றவர் மாயமானார்.