கொலை மிரட்டல்
சிவகாசி: சிவகாசி திருத்தங்கல் பழைய வெள்ளையாபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தலக்கு ராஜா 43. அதே பகுதியில் குழாய் கடை நடத்தி வரும் இவரிடம் பாண்டியன் நகரைச் சேர்ந்த பால்பாண்டியின் மனைவி, மகள்கள் வேலை பார்த்து வந்தனர். இதற்காக தலக்கு ராஜாவிடம் ரூ. 8000 முன்பணம் வாங்கிய நிலையில் வேறொருவரிடம் வேலை பார்த்து வந்தனர். இதனைத் தொடர்ந்து தலக்கு ராஜா, பால்பாண்டி வீட்டிற்கு சென்று முன் பணத்தை திருப்பி கேட்டார். பணத்தை தர மறுத்த பால்பாண்டி தகாத வார்த்தை பேசி முகத்தில் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
மூ.மு.க.., மாவட்டசெயலாளர் விபத்தில் பலி
சிவகாசி: சிவகாசி அருகே பள்ளப்பட்டி முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்தவர் பாலமுருகன் 43. இவர் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். இவர் பிப். 21ல் சிவகாசி நாரணாபுரம்ரோட்டில் டூ வீலரில் சென்ற போது நாரணாபுரத்தை சேர்ந்த பால்ராஜ் 69, (ெஹல்மெட் அணியாமல் ) ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதியது. இருவரும்காயமடைந்தனர். பாலமுருகன்மதுரை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
------- கஞ்சா பறிமுதல்
சிவகாசி: நதிக்குடி அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் திருப்பதி 42. இவர் பஸ் ஸ்டாப் அருகே கஞ்சா வைத்திருந்தார். மாரனேரி போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இளம் பெண் தற்கொலை
சிவகாசி: சிவகாசி மாரனேரி வடபகுதியைச் சேர்ந்தவர் மூக்கையா மகள் பவித்ரா 18. தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வந்த இவர் அடிக்கடி உடம்பு வலி என்று கூறி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதனை அவர் தாயார் கண்டித்தார். இந்நிலையில் பவித்ரா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
திருமண விரக்திஇளைஞர் தற்கொலை
விருதுநகர்: விருதுநகர் மீசலுார் செவல்பட்டியை சேர்ந்த லட்சுமணன் மகன் வெள்ளைச்சாமி 25. டிராக்டர் டிரைவராக பணிபுரிந்தார். அடிக்கடி வீட்டில் திருமணம் செய்து வைக்க கூறி வந்துள்ளார். இந்நிலையில் அம்மச்சியாரம்மன் கோயில் புளியமரத்தடியில் விஷம் குடித்தார். மதுரை மருத்துவமனையில் பலியானார். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் மாயம்
சிவகாசி: எரிச்சநத்தம் அம்பேத்கர் காலனி சேர்ந்தவர் செல்வக்குமார் மனைவி மாரீஸ்வரி 37. இவர் வேலைக்கு போவதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
-----பட்டாசு பறிமுதல்
சிவகாசி: சிவகாசி வெம்பக்கோட்டை அன்பில் நகரத்தைச் சேர்ந்த சேம் 33, துரத்துக்குடி மாவட்டம் செட்டிகுறிச்சியை சேர்ந்தவர் முத்தையா . இருவரும் போஸ் காலனியில் உள்ள சேம் வீட்டில் அனுமதி இன்றி விதிமுறைகளை மீறி குழாய் வெடிகள் தயார் செய்தனர். கிழக்கு போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து மணி மருந்து, மிஷின் திரி, பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
மகள் காதல் திருமணம்விரக்தியில் தாய் தற்கொலை
சாத்துார்: சாத்துார் இறவார்பட்டியை சேர்ந்தவர் செல்லிமுத்து மனைவி ஊராத்தாள், 40. இவரது மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனவிரக்தி அடைந்த ஊரத்தாள் காட்டுப்பகுதியில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் பலியானார்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.