Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

ADDED : ஜன 11, 2024 05:06 AM


Google News
தற்கொலை

விருதுநகர்: காந்திநகரை சேர்ந்தவர் மனோகரன் 57. இவர் கால் மூட்டு வலிக்காக கோவில்பட்டியில் சித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். இவர் ஜன. 9 காலை 11:30 மணிக்கு வீட்டில் விஷம் குடித்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் பலியானார். ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.

டூவீலர் மோதி காயம்

விருதுநகர்: ஏ.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா 55. இவர் இருக்குன்குடி - கோட்டூர் ரோட்டில் டூவீலரில் வந்து ஒரமாக நின்றுள்ளார். அப்போது தேனி, பெரியகுளத்தைச் சேர்ந்த பாண்டிமுருகன் 40, எதிர்திசையில் டூவீலரில் வந்து மோதியதில் கருப்பையா காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

இளம் பெண் மாயம்

சிவகாசி: திருத்தங்கல் கேகே நகரை சேர்ந்தவர் ஜோதிப்பிரியா 19. திருத்தங்கலில் மெடிக்கல் ஸ்டோரில் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல வேலைக்கு போவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us