ADDED : ஜன 06, 2024 05:24 AM
விபத்தில் போலீசார் இருவர் காயம்
விருதுநகர்: திருப்பூர் மாவட்டம் தட்டாங்கெட்டையை சேர்ந்த வெங்கடாசலமூர்த்தி 37, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அருள்குமார் 34. இருவரும் திருப்பூர் பெருமாநல்லுார் ஸ்டேஷனில் கான்ஸ்டபிள்களாக பணிபுரிகின்றனர். அருள்குமார் ஆட்டோவை விலைக்கு வாங்கி திருப்பூரில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் ஒப்படைக்க சென்றார். ஆர்.ஆர்., பாலத்தின் அருகே வந்த போது தடுப்பில் மோதியதில் ஆட்டோவை ஓட்டி வந்த அருள்குமார் பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். தலைக்காயம் ஏற்பட்டது. வெங்கடாசலமூர்த்திக்கு காலில் காயம் ஏற்பட்டது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மனைவியை குத்திய கணவன்
சிவகாசி: நேரு காலனியை சேர்ந்தவர் மாரீஸ்வரி 32. இவரும் இவரது கணவர் பால்பாண்டியும் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு மாதமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மாரீஸ்வரி வேலை முடித்து தனது வீட்டிற்கு காளியம்மன் கோயில் அருகே வரும்போது பால்பாண்டி அவரை வழிமறித்து தகாத வார்த்தை பேசி கத்தியால் வெட்டினார். அருகில் இருந்தவர்கள் வரவும் பால்பாண்டி கொலை மிரட்டல் விடுத்து கத்தியால் தன்னையும் குத்திக் கொண்டார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
லோடு வேன் மோதி தொழிலாளி பலி
ஸ்ரீவில்லிபுத்தூர்: மஞ்சப்பூத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன், 28, பேன்டேஜ் மில் தொழிலாளி. இவர் நேற்று மதியம் 1:45 மணியளவில் திருப்பாற்கடலில் இருந்து ராஜபாளையம் ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டல் வாசலில் நின்று கொண்டிருக்கும் போது, ராஜபாளையத்தில் இருந்து மதுரை சென்ற லோடுவேன் மோதி சம்பவ இடத்தில் பலியானார்.
மேலும் அப்பகுதியில் டூவீலர் அருகில் நின்று கொண்டிருந்த இடையன்குளம் ஜீவன், 55, என்பவர் காயமடைந்தார். ஸ்ரீவி., டவுன் போலீசார் விசாரித்தனர்.