ADDED : ஜன 03, 2024 05:45 AM
சரக்கு வேன் மோதி விபத்து
விருதுநகர்: பட்டம்புத்துாரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் 55. இவர் டூவீலரில் முட்டை வியாபாரத்திற்காக குப்பம்பாட்டிக்கு செல்ல நான்கு வழி சாலையை கடக்க முயன்றார். அப்போது மதுரையைச் சேர்ந்த கார்த்திக் சரக்கு வேன் ஓட்டி வந்து மோதியதில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் மாயம்
விருதுநகர்: சத்திரரெட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித் 30. இவர் கவுசல்யா 22, காதலித்து திருமணம் செய்தார். டிச. 31 வேலைக்கு சென்ற ரஞ்சித்தை இரவு 10:00 மணிக்கு தொடர்பு கொண்ட உறவினர் கவுசல்யா எங்கு சென்றார் என தெரியவில்லை என்றார். ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.
தவறி விழுந்தவர் பலி
விருதுநகர்: அண்ணாமலை தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் 36. இவர் டிச.12 இரவு 9:30 மணிக்கு மது குடித்து வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் ஜன.1ல் பலியானார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
மாணவி தற்கொலை
சாத்துார்: சாத்துார் மேலப்புதுாரைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் மகள் பாமா சுபாஷினி, 17. சாத்துாரில் 12 ம் வகுப்பு படித்து வந்தார். நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மன விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.