ADDED : பிப் 12, 2024 04:31 AM
லாரி மோதி போலீஸ், மனைவி காயம்
சிவகாசி: மாரனேரி மலர் காலனியை சேர்ந்தவர் விஜயராம பாண்டியன். இவர் மாரனேரி போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராணி 44, அதே பகுதியில் உள்ள கோ ஆபரேட்டிவ் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இருவரும் டூவீலரில், சாத்துார் அருகே உள்ள சுந்தர குடும்பம் பட்டிக்கு செல்வதற்காக டூவீலரில் சென்றனர். சிவகாமிபுரம் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது வடமலாபுரம் திருப்பதி 28, ஓட்டி வந்த லாரி மோதியதில் விஜயராம பாண்டியனுக்கு கை நசுங்கியது. ராணி காயம் அடைந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
கோயிலில் திருடியவர் கைது
விருதுநகர்: விருதுநகர் மல்லாங்கிணர் ரோட்டில் ஆதிபராசக்தி கோயிலில் பிப். 7 அதிகாலை 5:30 மணிக்கு திறந்து வைத்துவிட்டு காலை 9:00 மணிக்கு சென்று பார்த்த போது உண்டியல், ஐம்பொன் தாலி காணவில்லை. பூசாரி ரத்தினகுமார் புகாரில் விசாரித்து வந்த ஊரகப்போலீசார் சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட பிசிண்டியைச் சேர்ந்த தினேஷ் 22, கைது செய்தனர்.
--கொலை மிரட்டல்
சிவகாசி: ஞானகிரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துவேல் 63. இவர் நத்தம் பட்டியைச் சேர்ந்த முருகனிடம் ரூ.25 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தார். அதற்கு ரூ.மூன்றரை லட்சம் வரை வட்டி என இதுவரையிலும் ரூ. 42 லட்சம் வட்டி செலுத்தியுள்ளார். இந்நிலையில் முருகன் அவரிடம் மேலும் ரூ. 8 லட்சம் கேட்டு தகாத வார்த்தை பேசி கொலை மிரட்டல் விடுத்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
காரை எரித்தவர்கள் மீது வழக்கு
சிவகாசி: போஸ் காலனியை சேர்ந்தவர் மாரிக்கனி 49. இவரது வீட்டின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த முருகன், மாரீஸ்வரன், மாரிமுத்து ஆகியோர் மது அருந்தியதால் சத்தம் போட்டார். இந்நிலையில் மூவரும் மாரிக்கனி தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த அவரது காரை எரித்தனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
குட்கா, மது விற்றவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர்: பட்டத்தரசி அம்மன் கோவில் அருகில் டூவீலரில் வைத்து குட்கா, மது பாட்டில்கள் விற்ற வத்திராயிருப்பு வடக்கு தெருவை சேர்ந்த நாகமணி 62,ஐ ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் எஸ்.ஐ., கனகராஜ் கைது செய்து அவரிடம் இருந்த குட்கா புகையிலை பொருட்கள், மது பாட்டில்கள், விற்பனை பணம் ரூ.11,700 மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.
டூவீலர் மோதி விபத்து
விருதுநகர்: சின்னப்பரெட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் ராம்குமார் 27. இவர் பிப். 9 ல் இரவு பணிமுடித்து டூவீலரில் மூளிப்பட்டி - சின்னப்பரெட்டியப்பட்டி ரோட்டில் சென்ற போது பின்னால் டூவீலரில் வந்த செங்குன்றாபுரத்தைச் சேர்ந்த திருப்பதி ராஜா 32 மோதியதில் ராம்குமார் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.