Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/விளையாட்டு போட்டித் தொகையில் அலுவலர் ரூ.ஒரு லட்சம் கையாடல் வீரர்களிடம் போலீஸ் விசாரணை

விளையாட்டு போட்டித் தொகையில் அலுவலர் ரூ.ஒரு லட்சம் கையாடல் வீரர்களிடம் போலீஸ் விசாரணை

விளையாட்டு போட்டித் தொகையில் அலுவலர் ரூ.ஒரு லட்சம் கையாடல் வீரர்களிடம் போலீஸ் விசாரணை

விளையாட்டு போட்டித் தொகையில் அலுவலர் ரூ.ஒரு லட்சம் கையாடல் வீரர்களிடம் போலீஸ் விசாரணை

ADDED : ஜன 05, 2024 12:55 AM


Google News
சிவகங்கை:முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு ஒதுக்கப்பட்டத்தொகையில் சிவகங்கை மாவட்ட முன்னாள் விளையாட்டு அலுவலர் கீதா ரூ.1.23 லட்சம் கையாடல் செய்தது தொடர்பாக வீரர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

சிவகங்கை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் 2019-ல் மாவட்ட விளையாட்டு அலுவலராக பணிபுரிந்தவர் கீதா. இவர் 2018--2019 ஆண்டுக்கான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை நடத்தினார். இதற்காக ரூ.8.70 லட்சத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒதுக்கியது. மாவட்ட அளவில் சிறப்பாக விளையாடிய வீரர்கள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் 3 நாட்கள் பயிற்சி நடத்த வேண்டும் என ஆணையம் தெரிவித்திருந்தது. இதற்காக ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 வீதம் 3 நாட்களுக்கு ரூ.600-ம், அத்துடன் இருப்பிட வசதி அமைத்து கொடுப்பது, ஆடைகள் உள்ளிட்டவைக்காக ரூ.ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 400 ஒதுக்கப்பட்டது.

ஆனால் கீதா மாநில போட்டிக்கு தேர்வான 179 வீரர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி நடத்தியதாக ஆவணங்களை தயாரித்து ரூ. ஒரு லட்சத்து23 ஆயிரத்து 400 கையாடல் செய்துள்ளார். அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்தாண்டு ஜனவரியில் வழக்கு பதிவு செய்தனர். ஏற்கனவே கீதாவிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நேற்று அப்போது மாநில போட்டிக்கு தேர்வான வீரர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us