/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழிகொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி
கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி
கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி
கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி
ADDED : பிப் 12, 2024 04:21 AM
விருதுநகர்: விருதுநகரில் கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி நடந்தது.
டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் தலைமை வகித்தார். தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் மைவிழிச்செல்வி முன்னிலை வகித்தார்.
கொத்தடிமை தொழிலாளர் முறைக்கு எதிரான வாசகம் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.
பின் கொத்தடிமை தொழிலாளர் முறைக்கு எதிரான உறுதிமொழியை நேர்முக உதவியாளர் பிர்தோஷ் பாத்திமா, தொழிலாளர் துறை அலுவலர்கள், ஊழியர்கள், விழிக்கண் குழு உறுப்பினர்கள், உட்பட பலர் எடுத்து கொண்டனர். இத்தினத்தை முன்னிட்டு வருவாய்த்துறை அலுவலகங்கள், பி.டி.ஓ., அலுவலகங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டன.